காஷ்மீர் மக்கள் மெகா திருடர்கள் என தாம் கூறியதாக ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா மறுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரூக், "காஷ்மீ ரிகள் திருடர்கள் மட்டுமல்ல, மெகா திருடர்கள்" என பேசியதாக தகவல் வெளியானது.
இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற காஷ்மீர் சட்டசபை கூட்டத்தின்போது, காஷ்மீரிகள் மெகா திருடர்கள் என்று கூறிய பரூக் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான பிடிபி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,இதுகுறித்து ஜம்முவில் திங்கள்கிழமை செய்தி யாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறுகையில், "நாடு முழுவதும் மின்சாரம் சிறிய அளவில் திருடப்படு கிறது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் மின் விநியோகத் தின்போது அதிக இழப்பு ஏற்படு கிறது என்றுதான் கூறினேன். ஆனால் காஷ்மீர் மக்கள் திருடர் கள் என கூறவில்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது வருத்தமளிக் கிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago