நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: நீதிமன்ற வரலாற்றில் முதன்முறை

By எம்.சண்முகம்

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டார். இந்நிலையில், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச் சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதங்களை அனுப் பினார். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அபாண்டமான புகார்களைத் தெரி வித்திருந்ததாக கூறப்படுகிறது.

7 நீதிபதிகள் அமர்வு

இப்பிரச்சினையை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உச்ச நீதிமன்றம் விசா ரணைக்கு எடுத்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘நீதிபதி கர்ணன் பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீதிபதிகளையும் நீதிமன்றத்தின் மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் புகார்கள் அடங்கியுள்ளன. அவர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்பிரச்சினையை இப்படியே விட்டால், மக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதான மரியாதை குறைந்துவிடும். சட்டப் பிரிவுகள் 129 மற்றும் 142(2)-ன் கீழ், உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின்படி, உயர் நீதிமன்றம் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் நீதிமன்ற நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.

அப்போது தலைமை நீதிபதி கேஹர், ‘உச்சநீதிமன்றம் இதுவரை இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததில்லை. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் முன்மாதிரியாக அமையும். எனவே, ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும்போது, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கவனமுடன் செயல்பட வேண்டும். நீதிபதி கர்ணனிடம் இருந்து எனக்கும் பல கடிதங்கள் வந்தன. இருப்பினும், அவரது கருத்தையும் கேட்க விரும்பு கிறோம்’ என்று தெரிவித்தார். பின்னர், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர் தன்னிடம் உள்ள நீதிமன்ற பணிகள் மற்றும் நிர்வாக ஆவணங்களை உடனடியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு, நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் பணியாற்றியபோது, 12 வழக்குகள் தொடர்பான ஆவணங் களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும், அவருக்கு சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பை இன்னும் காலி செய்யவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்