தெஹல்கா இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலை மேலும் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சக பெண் நிருபரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கோவா மாநில போலீசார் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பனாஜி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு கடந்த சனிக்கிழமை (நவம்பர் 30.ல்) நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அன்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.வழக்கமான நடைமுறைகளுக்குப் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தேஜ்பால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது காவல் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தருண் தேஜ்பாலுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேஜ்பாலிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர்: பரஸ்பரம் சம்மதத்துடனேயே சம்பவம் நடந்ததாக தேஜ்பால் தெரிவித்ததாக கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago