ஆட்சி அமைக்கலாமா, அமைக்கக் கூடாதா?- மக்களிடம் கருத்து கேட்கிறது ஆம் ஆத்மி

By செய்திப்பிரிவு

டெல்லி சட்டசபை தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, ஆட்சி அமைக்கலாமா, கூடாதா? என மக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் செவ்வாய்கிழமை தம் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

டெல்லியில் காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்கலாமா, அமைக்கக் கூடாதா? என இங்கு வாழும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். இதற்காக, அவர்களுக்கு 25 லட்சம் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டு பதில் பெறப்படும். 08806110335 என்ற எண்ணிற்கு ஆம் அல்லது இல்லை என குறுஞ்செய்தி அனுப்பலாம். கட்சியின் இணையதளம் மற்றும் ஃபேஸ்புக்கிலும் கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம். கருத்துக் கேட்பு பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

இவை அனைத்தையும் பரிசீலித்து வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும். வரும் 23 ஆம் தேதி துணைநிலை ஆளுநரிடம் கட்சியின் நிலையை விளக்குவோம் என்றார்.

காங்கிரஸுக்கு எழுதிய கடிதத்திற்கு கிடைத்த பதில் பற்றி கெஜ்ரிவால் தெரிவித்த போது, ‘பாமர மக்களான நாம் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. எனவேதான் நம்மால் தோற்கடிக்கப்பட்ட கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைக்க பொது ஜனத்திடம் கருத்து கேட்கிறோம். இந்த விஷயத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் ஒன்று சேர்ந்துள்ளன’ என்றார்.

டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக்காலம் வரும் செவ்வாய்க்கிழமையுடன் காலாவதி யாகிறது. ஆகவே, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்