ஆந்திரத்தைப் பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீமாந்திரா பகுதி மக்கள் தெலங்கானா மசோதா நகலை எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடினர்.
போகிப் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அதிகாலையில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்த பழைய துணிமணிகள் மற்றும் பொருட்களை தங்களது வீட்டுக்கு முன்பு வைத்து தீயிட்டுக் கொளுத்தினர்.
ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் தெலங்கான மசோதா நகல்களை எரித்து தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்தனர்.
குறிப்பாக பிரகாசம், ஒங்கோல், குண்டூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர் சங்கத்தினர், தெலுங்கு தேசம் கட்சியினர், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்டோர் தெலங்கான மசோதா நகல்களை கிழித்து, எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago