பாஜகவில் இணைகிறேன்: எடியூரப்பா

By செய்திப்பிரிவு

பா.ஜ.க. தலைமையின் தொடர் வேண்டுகோளை ஏற்று,சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு மீண்டும் அக்கட்சியில் இணையவுள்ளேன். இதற்காக எந்தவிதமான நிபந்தனையையும் நான் விதிக்கவில்லை என‌ கர்நாடக ஜனதா கட்சியின் தலைவரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா திங்கள் கிழமை தெரிவித்தார்.

கர்நாடக ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம், ஷிமோகா மாவட் டத்தில் உள்ள ஷிகாரிபுராவில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்றது.

திங்கள்கிழமை நடைபெற்ற கூட் டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் எடியூரப்பா, “என்னை மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணையுமாறு, அக்கட்சியின் தேசிய தலைவர்களும், கர்நாடகத்தில் உள்ள முக்கிய தலைவர்களும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத் தார்.

அவரிடம், ‘நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். எனவே, உங்களுடைய வேண்டுகோளை ஏற்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறேன்’ என்று தெரிவித்தேன்.

எனது சொந்த ஊரான ஷிகாரி புராவில் நடைபெறும் இந்த கூட்டம் தான், கர்நாடக ஜனதா கட்சியின் கடைசிக் கூட்டம் என நினைக்கிறேன். சங்க ராந்திக்கு (பொங்கல்) பிறகு, பாஜகவில் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளேன்.

எனது அன்பான வேண்டு கோளை ஏற்று கர்நாடக ஜனதா கட்சியின் முக்கிய‌த் தலைவர்களும், செயல் வீரர்களும் என்னோடு சேர்ந்து பா.ஜ.க.வில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார்கள்” என்றார்.

கர்நாடக ஜனதா கட்சிக் கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “மோடியை பிரதம ராக்க வேண் டும் என்பதற்காக மட்டுமே மீண்டும் தாய்க் கட்சி யில் இணைகிறேன்.நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

நான் பா.ஜ.க. விலிருந்து விலகியதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.

நான் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி, கண் முன்னே கரைவதை காண சகிக்கவில்லை. எனவே அயராது உழைத்து அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்து, மோடியை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்