பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கர சேவகர்களை தூண்டியதாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.
அத்வானி உள்ளிட்டோர் மீது ரேபரேலி மற்றும் லக்னோவில் தொடரப்பட்ட 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் விசாரிக்குமாறு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 19-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் 4 வாரத்துக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தினமும் விசாரணை நடத்தி 2 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தர விட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அன்றைய தினம் இவர்கள் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்யும் எனத் தெரிகிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து விரைவில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் அத்வானி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பதால் அத்வானிக்கு குடியரசுத் தலைவர் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
பாபர் மசூதி தொடர்பான மற்றொரு வழக்கில் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களில் சதீஷ் பிரதான் மட்டுமே ஆஜரானார்.
மஹந்த் ரித்யா கோபால் தாஸ், மஹந்த் ராம் விலாஸ் வேதாந்தி, வைகுந்த் லால் சர்மா (எ) பிரேம்ஜி, சம்பத் ராய் பன்சால், தர்மா தாஸ் ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு கோரியிருந்தனர். இதனால் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் கூறும் போது, “குற்றம்சாட்டப்பட்டவர் களில் 5 பேர் நேரில் ஆஜராக விலக்கு கோரியிருந்தனர். ஒருவர் மட்டுமே ஆஜரானதால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கு 30-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்படுகிறது. இதற்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago