லோக்பால் மசோதாவுக்காக குளிர்காலத் தொடரில் உண்ணாவிரதம்: அண்ணா ஹஜாரே

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் ஜன லோக்பால் மசோதாவை உடனடியாக அமல்படுத்தத் தவறினால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தில் ஜன லோக்பால் மசோதா குறித்து குடியரசுத் தலைவர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மக்களை மத்திய அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டியுள்ள அவர், குளிர்கால கூட்டத் தொடரின்போது ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஊழலைத் தடுப்பதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட லோக்பால் மசோதா, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்