ஆந்திர சட்டமன்றம் ஜனவரி 3-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதா மீது விவாதம் தொடங்கப்படாமலேயே அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 12-ஆம் தேதியன்று தொடங்கியது. அவை தொடங்கிய நாள் முதல் அவையில், உறுப்பினர்கள் தெலங்கானா விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் அளித்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியது.
இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். குடியரசுத் தலைவரின் பரிந்துரையின்படி ஆந்திர சட்டமன்றத்தில் மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு ஏதுவாக மசோதா பலத்த பாதுகாப்புடன் ஆந்திர சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதா மீது எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமலேயே அவை ஜன.3-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3.ல் மீண்டும் கூடும் சட்டமன்றம் ஜனவரி 10 வரையிலும், பின்னர் ஜனவரி 16 முதல் 23 வரையிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago