ராகுல் வீட்டின் எதிரே பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

இமாசல பிரதேச முதல்வர் மீது பாரதிய ஜனதா எழுப்பியுள்ள ஊழல் விவகாரம் வலுக்கிறது. அந்தக் கட்சியின் இளைஞர் அணியினர் ராகுல் காந்தி வீட்டை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடந்த திங்கள்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அந்த மாநிலத்தில் நீர் மின் திட்டம் செயல்படுத்தும் ஒரு தனியார் நிறுவனத்திடம் வீரபத்ரசிங் லஞ்சம் வாங்கியதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் ஹமீர்பூர் எம்பியும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான அனுராக் தாகூர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், டெல்லி துக்ளக் சாலையில் செவ்வாய்க்கிழமை கூடினர்.

அங்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தின் வெளியே முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

இது பற்றி அனுராக்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த குளிரிலும் எங்கள் மீது போலீஸார் பீய்ச்சி அடிக்கும் நீரை பற்றி கவலை இல்லை. இனிமேலும் முதல்வராக நீடிக்க வீரபத்ரசிங்குக்கு தகுதியில்லை. மகாராஷ்டிராவின் ஆதர்ஷ் விசாரணை அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்தது தவறு என்று சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, வீரபத்ரசிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்