நான்கு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு: 10-ல் 6-ஐ கைப்பற்றியது லாலு - நிதிஷ் கூட்டணி

நான்கு மாநில 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 8-ல் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கியது. பிஹாரின் 10 தொகுதிகளில் 6-ஐ லாலு-நிதிஷ் கூட்டணி கைப்பற்றி உள்ளது.

பிஹார் (10), பஞ்சாப் (2), கர்நாடகம் (3), மத்தியப் பிரதேசம் (3) ஆகிய 4 மாநிலங்களில் 18 தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

பிஹாரில் 10 தொகுதிகளுக்கான தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (4), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (4), காங்கிரஸ் (2) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் லாலு கட்சி 3, நிதிஷ் கட்சி 2, காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி போட்டியிட்ட ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸிடம் தோல்வி அடைந்துள்ளது.

பஞ்சாபில் பாஜகவுக்கு 1

பஞ்சாபில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் காலி செய்த பாட்டியாலா தொகுதியில் அவரது மனைவி பிரனீத் கவுர் வெற்றி பெற்றுள்ளார்.

தல்வந்தி சாபு தொகுதியை பாஜகவின் கூட்டணியுடன் ஆளும் சிரோமணி அகாலி தளம் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸிலி ருந்து விலகி அகாலி தளம் சார்பில் போட்டியிட்ட ஜித்மொஹிந்தர் சிங் சித்து வெற்றி பெற்றுள்ளார்.

ம.பி.யில் பாஜக-வுக்கு வெற்றி

மத்தியப் பிரதேசத்தின் பஹோரிபந்த், விஜய் ராகவ்கர் மற்றும் அகர் ஆகிய மூன்று தொகுதிகளையும் பாஜக தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ்

பெல்லாரி ஊரக தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள் ளது. மற்ற இரண்டிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் ‘மோடி அலை’ வீசிய தாகக் கூறப்பட்டது.

ஆனால் நான்கு மாநிலங் களில் மொத்தம் 18 தொகுதி களில் நடந்த சட்டசபை இடைத்தேர் தலில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு 8-ல் மட்டுமே வெற்றி கிடைத் துள்ளது. இது அக்கூட்டணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்