இயற்கை எரிவாயு விலை தொடர்பாக வழக்கு, விசாரணை என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எடுத்துள்ள நடவடிக்கை பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இந்த விலை உயர்வு விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், கேஜ்ரிவால் அறிவித்துள்ள விசாரணை தேர்தல் கண்ணோட்டத்தில் இருக்கலாம் என கருதப்படுகிறது.
கேஜ்ரிவாலிடம் புகார் செய்திருக்கும் காமினி ஜெய்ஸ்வால் உச்ச நீதிமன்ற வழக்கில் ஒரு முக்கிய மனுதாரர். பிரபல வழக்கறிஞர் எப்படி ஒரே சமயத்தில் இரு விசாரணைகள் கோர முடியும் என கேள்வி எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் மத்திய அரசு சம்பந்தப்பட்டதாகும், இதில், நுழைய டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
டெல்லி போலீஸார் மீது நம்பிக்கை இல்லை என கூறும் கேஜ்ரிவால், இந்த விசாரணையை என்ன எதிர்பார்ப்பில் உத்தரவிட்டுள்ளார்; ஒருவேளை இதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சரியாக கையாளவில்லை
எனில், மீண்டும் உள்துறை அமைச்சகம் முன் போராட்டம் நடத்துவரா என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago