சிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான விருது

By செய்திப்பிரிவு

புது டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்தி உள்பட 13 பேருக்கு சிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்தி, தென்னாப்பிரிக்காவில் ஆற்றி வரும் சமூக சேவையைப் பாராட்டியும், இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த அவர் மேற்கொண்டு வரும் பணிகளை கவுரவிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இலா காந்தி, 1994 முதல் 2004-ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

விருது பெற்றவர்கள் விவரம்

ஆஸ்திரேலியாவின் செனட் அவை உறுப்பினர் லிசா மரியா சிங், பிஜியில் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள ராமகிருஷ்ண மடம், பஹ்ரைனைச் சேர்ந்த தொழிலதிபர் குரியன் வர்கீஸ், கனடாவில் சமூகச் சேவையில் ஈடுபட்டுவரும் வாசுதேவ் சச்லானி, பிரான்சில் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் பிகாஸ் சந்திர சன்யால், நெதர்லாந்தில் பொதுச் சேவையில் ஈடுபட்டு வரும் சத்நாராயண் சிங் ராபின் பல்தேவ் சிங், பப்புவா நியூ கினியாவில் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சசிந்தரன் முத்துவேல், சவுதி அரேபியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஷிபுதீன் வவா கன்ஜு, ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஷம்ஷீர் வாயலில் பரம்பத், பிரிட்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் சைலேஷ் லட்சுமண் வாரா, அமெரிக்காவில் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் பார்த்தசாரதி சிராமெல் பிள்ளை, அமெரிக்காவில் கல்விப் பணியாற்றி வரும் ரேணு கடோர் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்