திருப்பதி லட்டு பிரசாதம் சுமார் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் வகையில் காற்று புகாத பைகளை தயாரித்து வழங்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேகேஜிங் (ஐஐபி) முன்வந்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்து லட்டு பிரசாதம் வாங்கிச் செல்வது வழக்கம். தேவஸ்தானம் சார்பில் தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 300 சிறப்பு தரிசன கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதுதவிர, கூடுதலாக தேவைப்படும் பக்தர்களுக்கு, தலா ரூ. 25 வீதம் 4 லட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த லட்டுகள் இப்போது சாதாரண பிளாஸ்டிக் உரையில் வைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. 4 அல்லது 5 நாட்களுக்குப் பிறகு அதன் சுவையில் சற்று மாற்றம் காணப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காற்று புகாத பைகளை (வேக்யூம் பேக்) தயாரித்து வழங்க தயாராக இருப்பதாக ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “நாங்கள் தயாரித்து கொடுக்கும் பையில் லட்டு பிரசாதத்தை வைத்து விநியோகம் செய்தால் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்” என கூறியுள்ளது.
இதனை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago