பாலாறு தடுப்பணையில் விழுந்தவர் சடலமாக மீட்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் குப்பம், புல்லூர் பகுதியில் 5 அடி உயர பாலாற்று தடுப்பணையை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் இந்த அணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில் தமிழகத்தின் பள்ளத்தூரை சேர்ந்த சீனுவாசன் (57) என்பவர் நேற்று முன்தினம் தவறி விழுந்தார்.

இதுகுறித்து குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளத்தூரை சேர்ந்த சீனுவாசன் தடுப்பணை அருகே உள்ள நாச்சியாரம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது கால் தவறி விழுந்துள்ளார். இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் தரப்பில் மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு வரை தேடினர். பின்னர் சனிக்கிழமை காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் சீனுவாசன் சடலமாக மீட்கப்பட்டார். குப்பம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதை கண்டித்து சீனுவாசன் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறு. அவர் மது அருந்திவிட்டு தடுப்பணைக்கு குளிக்கச் சென்றபோது கால் தவறி விழுந்ததால்தான் இறந்தார். இவ்வாறு குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்