ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் வரம்பு மீறி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும், போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரச்சினைக்குரிய பகுதிகளாக அரசால் கருதப்படும் காஷ்மீர், மணிப்பூர் இன்னும் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) அமலில் உள்ளது. அப்பகுதிகளில் நடைபெறும் கிரிமினல் குற்றங்களை தடுக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அதேவேளையில் இச்சட்டம் துஷ்பிரயேகம் செய்யப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. மணிப்பூரில் ராணுவமும், மணிப்பூர் போலீஸாரும் சந்தேக நபர்களை போலி என்கவுன்ட்டர்களில் சுட்டுக் கொல்வதாகவும் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டுகளில் அப்பாவி மக்கள் 1528 பேர் போலி என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டதற்கு நியாயம் கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மதன்.பி.லோகூர், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், "பிரச்சினைக்குரிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் போலி என்கவுன்ட்டர்களில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விரிவாக விசாரிக்க வேண்டும்.
மேலும், ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தினை வரம்பு மீறி பயன்படுத்திவிட்டு சிறப்புச் சட்டத்தை கைகாட்டி கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு கோர முடியாது.
பாதுகாப்புப் படையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட புத்தகத்திலும் ஏகப்பட்ட நடத்தை விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை எக்காரணம் கொண்டும் ஒருவர் அத்துமீற முடியாது. எனவே, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் வரம்பு மீறி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago