நிருபரின் மைக்கைத் தட்டிவிட்ட ‘வதேரா மீது புகார் செய்தால் நடவடிக்கை’: பிரகாஷ் ஜவடேகர்

By பிடிஐ

செய்தியாளரின் மைக்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தட்டி விட்ட விவகாரத்தில், புகார் வரப்பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா நில பேர ஊழல் தொடர்பாக கேள்வியெழுப்பிய நிருபரின் மைக்கை கோபமாக தட்டி விட்ட ராபர்ட் வதேரா அவரிடம் கடுமையாக நடந்து கொண்டார். இது பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அனைவரின் கடமை. ஊடகங் களை அவற்றின் பணியைச் செய்ய விடுங்கள். வதேரா நடந்து கொண்டது பற்றி புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

காங்கிரஸ் கருத்து

வதேராவின் செயலுக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ள காங்கிரஸ், “தனிநபர் ஒருவரை தொடர்ந்து துரத்துவது சரியான ஒன்றல்ல. தனியார் விழாக்களில், மகிழ்ச்சியைத் தராத வகையில் கேள்விகளைக் கேட்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறும்போது, “இந்தியா வாழைப்பழ நாடு இன்றும், இந்தியர்களை மாங்காய் மக்கள் என்றும் விமர்சித்த வதேரா தற்போது இந்தியா வாழைப்பழ நாடல்ல என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்