தெலங்கானா, சீமாந்திரா மக்களின் திருப்தியே முக்கியம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை, மும்பை புறநகர் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கு பேசும் மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப் பட்டது தெலுங்கு தேசம் கட்சி. சிவசேனை கட்சியைப் போல, தெலுங்கு தேசம் கட்சியும் தங்கள் மக்களின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.
ஆந்திரப் பிரிவினை மூலம் மத்திய அரசு இரு பிராந்திய மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும். தெலங்கானா உருவாக்க விரும்பினால் சீமாந்திரா பகுதி மக்கள் அதை ஏற்கும்படிச் செய்யவேண்டும். மாறாக ஆந்திரம் ஒரே மாநிலமாக நீடிக்க முடிவெடுத்தால் தெலங்கானா மக்கள் அதை ஏற்கும்படிச் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங் கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் இடையே ரகசிய உடன் பாடு உள்ளது. மாநிலத்தை பிரிப்ப தற்கு டெல்லியில் இருந்தவாறே மத்திய அரசால் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கி றோம். இதற்கு சிவேசனை ஆதரவை பெறுவதற்காக நான் இங்கு வந்தேன் என்றார் சந்திரபாபு நாயுடு.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago