அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு ஜேட்லி சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுடன் சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்வது இப்போதைக்கு பாகிஸ்தான் கைகளிலேயே இருக்கிறது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி கூறும்போது, "பாகிஸ்தானுடன் சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பாகிஸ்தானே முடிவு செய்ய வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தை இந்திய அரசாங்கத்துடனானதா அல்லது இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதிகளுடனானதா என்பதை பாகிஸ்தான் நாடே தெளிவுபடுத்த வேண்டும்.

புதிய அரசு எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்திருக்கிறது. அதற்கு முதல் அடியாகவே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டார். எல்லையில் நிலவும் அசாதாரண சூழல் பேச்சுவார்த்தையை தொடர உகந்ததாக இல்லை" என்றார்.

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தகக்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்