சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் நீரிழிவு நோய்க்கான இன்ஸுலின், சினிமா டிக்கெட் உட்பட 66 பொருட்கள் மீதான வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
ஆனால், திருப்பதி ஏழுமலை யான் கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு வழங்கப்படும் பிரசாதம், தங்கும் அறை, ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான கட்டணங் களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென ஆந்திர அரசு கோரிக்கை வைத்தது. இதை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்க மறுத்துவிட்டது. ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் கிடைத்து வரும் அனைத்து கோயில்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
மாநில அரசு விரும்பினால் நேரடி மானிய திட்டத்தின் மூலம் இந்த வரியை ரத்து செய்யலாம், அல்லது குறைத்துக் கொள்ளலாம் எனவும் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
இதனால் வரும் ஜூலை 1 முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இது தொடர்பாக மாநில அரசிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக தேவஸ்தான உயர் அதிகாரிகள் ‘தி இந்து’ விடம் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,100 கோடியை தாண்டி உள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு ‘வாட்’ வரி விதிப்பில் இருந்து இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago