அமெரிக்கத் தூதரகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சுவதால் தான் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக் கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: முழுக்க முழுக்க பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செய்கிறதே என்பதற் காகப் பதிலுக்கு நாமும் செய்ய வேண்டுமே என்று இப்படிச் செய்யவில்லை.
பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் அதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்பு கள்தான் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்கின்றன. பாது காப்பு விவகாரங்களில் விட்டுக் கொடுக்கும் நிலையே கிடையாது. மிகுந்த கவனத்துடன் இதைக் கையாளுகிறோம்.
தேவயானி விவகாரத்தைய டுத்து தூதரகத்துக்கு வெளியே இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது தொடர்பாக அமெரிக்கா கவலை அடையத் தேவையில்லை.
டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பள்ளி, அமெரிக்க மையம் ஆகியவற்றில் 24 மணி நேரத்துக்கு 150 போலீஸார் பாதுகாப்பில் மாறி மாறி ஒவ் வொரு பணி வேளையிலும் ஈடுபடு கின்றனர். இவை தவிர தூதரகம் அருகில் அமைந்துள்ள சாலைகளில் நிரந்த ரமாக, 2 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடனான நெருக் கம் முக்கியமானது. இதை அமெரிக்காவும் ஒப்பு கொள்ள வேண்டும். நியூயார்க்கில் இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி கைது செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து இரு நாடுகளிலும் தூதரக உறவு நிலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் குர்ஷித். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago