தெலுங்கு தேசம் கட்சியை யாரும் அசைக்க முடியாது: சந்திர பாபு நாயுடு

By என்.மகேஷ் குமார்

தெலுங்கு தேச கட்சியை எந்த சக்தியாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டிலேயே பல முதன்முறையாக பல்வேறு மக்கள் நலதிட்டங்களை அமல் படுத்தியது தெலுங்கு தேசம் கட்சி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தலைவர் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இம்முறை 50 லட்சம் புதிய தொண்டர்கள் கட்சியில் இணைய உள்ளனர். மக்களின் பேராதரவு கொண்ட தெலுங்கு தேசம் கட்சியை எந்த சக்தியாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. அடிமட்ட தொண்டர்கள் ஒவ்வொருவரும் கட்சிக்காக உழைத்து நல்ல நிர்வாகியாக உயர வேண்டும். என்.டி.ஆர் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலதிட்டங்கள் அமல் படுத்தப்பட உள்ளன. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்