மத்தியபிரதேச மாநிலம் பலாகாட் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
தீ மளமளவென பரவி, பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதும் பணியில் இருந்த மேலும் 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையில் இருந்து உடனடியாக வெளியேறியதால், காயமின்றி உயிர் தப்பினர். இதற்குள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறை பாடுகள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அரசின் எண்ணெய் மற்றும் தானிய கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago