கேரள அமைச்சராக பதவியேற்றார் ரமேஷ் சென்னிதலா

By செய்திப்பிரிவு

கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரமேஷ் சென்னிதலா, அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார்.

ரமேஷ் சென்னிதலாவுக்கு (57) ஆளுநர் நிகில் குமார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சராக இருந்த திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு போக்குவரத்து மற்றும் வனத் துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

ரமேஷ் சென்னிதலாவை அமைச்சராக்கியுள்ளதன் மூலம், அவர் சார்ந்துள்ள நாயர் சமூக வாக்குகளைப் பெருவாரியாக பெற முடியும் என காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அமைச்சரவையில் இந்துக் களைவிட கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின் றனர் என்று நாயர் சேவை சங்கம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து ரமேஷ் சென்னி தலாவை அமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுத்தது.- பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்