உ.பி.யில் பாதியை வளைக்க பாஜக திட்டம்- மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கு குறி

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் 80-ல் 40 தொகுதிகளில் வெற்றி பெறத் திட்டமிடுகிறது பாரதிய ஜனதா கட்சி.

தற்போது பத்து தொகுதிகளை வைத்திருக்கும் பாஜக, கடந்த 2009 தேர்தலில் சுமார் ஆறு தொகு திகளில் முப்பதாயிரம் மற்றும் நான்கு இடங்களில் ஐம்பதாயிரம் வாக்குகளில் தோல்வி கண்டது.

இத்தனைக்கும் 18.25 சதவிகித வாக்குகள் பெற்ற காங்கிரசை விட பாஜகவிற்கு 1.25 மட்டுமே குறைவாகக் கிடைத்தது. காங்கி ரஸ் பாஜகவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக 21 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டது.

அதேபோல், உபியில் உள்ள ரிசர்வ் தொகுதிகள் 17. இதில், ஆக்ரா மற்றும் பன்ஸ்காவ்ன் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. எனினும், மீதம் உள்ள 15 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வாக்குகள் எண்ணிக்கை கடந்த தேர்தல்களை விட அதிகமாகக் கிடைத்திருக்கிறது. இது, அந்த ரிசர்வ் தொகுதிகளில் தம் கட்சியின் அதிவேகமான வளர்ச்சியை காட்டுகிறது என்பது பாஜகவின் கணிப்பு.

இது குறித்து தி இந்துவிடம் பேசிய பாஜகவின் தேசிய நிர்வாகி கள் வட்டாரம் கூறுகையில், ‘ரிசர்வ் தொகுதிகளின் தலித் வாக்காளர்களை குறி வைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம், குறைந்தது 11 சீட்டுகளை பெறுவோம். ஏற்கனவே, வென்ற பத்தையும் தக்க வைத்து கொள்வது பெரிய காரியமல்ல. ஏனெனில், 2004-ல் கூட அந்த பத்து எங்களிடம்தான் இருந்தது.’ எனக் கூறுகின்றனர்.

இந்த 21 தொகுதிகளையும் சேர்த்து 2009-ல் இரண்டாம் நிலை பெற்ற 11 தொகுதிகளுடன் 32-ஐ எளிதாக பெற முடியும் எனவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் ஜாலத்திற்காக எட்டு சேர்த்தால் 40 தொகுதிகள் பாஜகவிற்கு உறுதி எனவும் அந்த நிர்வாகிகள் வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்