கோவா மாநிலம் கனக்கோனா மாவட்டத்தில் 27 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான கட்டிட விபத்து தொடர்பாக அம்மாவட்ட துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட துணை ஆட்சியர் பிரசாந்த் ஷிரோத்கர், கனக்கோனா முனிசிபல் கவுன்சில் தலைமை அலுவலராகவும் உள்ளார்.
கடந்த 4-ஆம் தேதி இடிந்து விழுந்த கட்டுமானப் பணிகள் நிறைவேறாத அந்த கட்டடத்தில் குடியேற பிரசாந்த் ஷிரோத்கர் அனுமதிக் கடிதம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதியன்றே அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பிரசாந்த் ஷிரோத்கர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டிட விபத்தில் இதுவரை 27 பேரது சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு பலி எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை.
ஆனால், கட்டிட விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் குழுவை அமைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago