அடுத்தது என்ன?-கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் முக்கிய ஆலோசனை

By செய்திப்பிரிவு

டெல்லியில் 49 நாட்கள் நடைபெற்ற ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியினர் இன்று கூடி முக்கிய முடிவு எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காலை 11 மணி முதலே, கேஜ்ரிவால் இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.

கேஜ்ரிவால் குற்றச்சாட்டு:

இரண்டு நாட்களுக்கு முன்னர், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ததை சுட்டிக்காட்டிய கேஜ்ரிவால், காங்கிரஸ், பாஜ கட்சிகள் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கைப்பாவையாக மாறிவிட்டன என குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்