சட்டவிரோத குடியிருப்புக்கு அங்கீகாரம் : ஷீலா தீட்சித் மீது விசாரணை; பிரணாபுக்கு கேஜ்ரிவால் கடிதம்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட காலனிகளுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அங்கீகாரம் அளித்தது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக சட்ட விரோதமாக ஆயிரம் காலனிகளுக்கு 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஷீலா அங்கீகாரம் அளித்ததாக புகார் எழுந்தது. இதை விசாரித்த டெல்லி மாநில லோக் ஆயுக்தா அமைப்பு, ஷீலா மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கண்டறிந்தது.

இந்த அறிக்கை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை முதல்வரின் கருத்தை அறிய, அவரின் அலுவலகத்துக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிவைத்தது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கேஜ்ரிவால் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில், ஷீலா தீட்சித் மீது விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸின் முன்னாள் முதல்வர் மீது விசாரணை நடத்த கேஜ்ரி வால் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்