அமீர்கான் நடித்த 'தங்கல்' படத்தில், அவரது மகளாக நடித்து பாராட்டைப் பெற்ற சாய்ரா வாசிக் (16) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
’தங்கல்’ படத்தில் சிறுவயது கீதா போகத்தாக நடித்திருந்தார் சாய்ரா வாசிம். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைத்தது.
இந்த நிலையில் காஷ்மீரைச் சேர்ந்த சாய்ரா வாசிம் அம்மாநிலத்தின் முதல்வரான மெகபூபா முப்தியுடனான சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்,
இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் காரணமாக மன்னிப்பு கோரியுள்ளார் சாய்ரா.
சாய்ரா வாசிமின் புகைப்படப் பதிவின் கீழே ஏராளமான, காஷ்மீர் பிரிவினை ஆதரவாளர்கள் மெகபூபா முக்தியுடனான அவரது சந்திப்பை விமர்சிக்கும் வகையில் பதிவிடத் தொடங்கினர்.
இதனையடுத்து சாய்ரா தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்து அதனை நீக்கி மற்றொரு பதிவிட்டார். அதில், "நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அந்த பதிவைப் போடவில்லை. மெகபூபா முக்தியுடனான என் சமீபத்திய சந்திப்பு உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடந்தவை பற்றியும், அம்மக்களின் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது". என்று பதிவிட்டார்.
மெகபூபா முப்தியுடன் சாய்ரா வாசிம் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
சாய்ரா வாசிமுடனான மெகபூபா முப்தி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை காஷ்மீரின் 'முன் உதராணம்' என்று குறிப்பிட்டு இருந்தது.
இதற்கு பதிலளித்த சாய்ரா, "நான் தொடர்ந்து காஷ்மீர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக நிலை நிறுத்தப்படுகிறேன். நான் ஒன்றைத் தெளிவாக கூற விரும்புகிறேன், யாரும் என்னை முன்னுதாரணமாக பின் தொடர எனக்கு விருப்பமில்லை. நான் செய்ததை நினைத்து நான் பெருமைகொள்ளவும் இல்லை.
சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன். 16 வயதுள்ள பெண்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.
சாய்ராவுக்கு ஆதரவு
சாய்ராவின் பதிவுக்கு எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, காஷ்மீர் நெட்டிசன்கள் #IamWithZairaWasim என்ற ஹாஷ்டேக்குடன் சாய்ரா வாசிமுக்கு ஆதரவாக தங்களது பதிவுகளையிட்டனர்.
சாய்ராவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீராங்கனை பபித்தா போகத் உட்பட பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago