தனித் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: சீமாந்திராவில் முழு அடைப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திரம் மாநிலத்தை பிரித்து தனி தெலங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் இன்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் அங்கு பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் அமளி:

ஆந்திர சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபை தொடங்கியது. சில நிமிடங்களிலேயே, தனித் தெலங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை தொடங்கியவுடன், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சுயினர் ஆந்திரம் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்கள் எழுப்பினர்.

மேலும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு தெலங்கானா விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் இதனை ஏற்க ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

மேலும், ஆந்திரா, ராயல்சீமா எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோசங்கள் எழுப்பினர். தொடர் அமளியை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 23 வரை அவகாசம்:

ஆந்திர மாநில சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று தொடங்கியது. தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதா மீது எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமலேயே அவை ஜன.3-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 3.ல் மீண்டும் கூடும் சட்டமன்றம் ஜனவரி 10 வரையிலும், பின்னர் ஜனவரி 16 முதல் 23 வரையிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றும் அவை கூடியவுடன் அமளி நீடித்தது.

தெலங்கானா மசோதா குறித்து கருத்து தெரிவிக்க ஆந்திர அரசுக்கு வரும் 23-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்