ஜாமீனில் விடுதலையான ஜெகன்மோகனுக்கு உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் 16 மாத காலத்துக்குப் பின், சிறையில் இருந்து விடுதலையான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்ட வரவேற்பு அளித்தனர்.

ஹைதராபாத் - சஞ்சல்குடா சிறையிலிருந்து வெளியே வந்த அவரை, அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்துவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஜெகன்மோகன் ரெட்டிக்கு திங்கள்கிழமை ஜாமீன வழங்கி உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் காலையிலேயே சஞ்சல்குடா சிறை முன் செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த ஜெகன்மோகன் ரெட்டி சிரித்த முகத்துடன் ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள், கட்சி எம்.எல்.ஏ.க்களை நோக்கி கைகூப்பி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். கூட்டத்தினர் மத்தியில் சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்களுடன் கை குலுக்கி மகிழ்ந்தார்.

பின்னர் தனது ஆதரவாளர்கள் வாகனங்கள் புடை சூழ சிறை வளாகத்திலிருந்து தனது வீட்டுக்குப் புறப்பட்டார். அவரது வாகனத்தை ஆதரவாளர்கள் நெருங்காத வகையில் கட்டுப்படுத்திட பாதுகாவலர்கள் திணறினர். ஆயுதமேந்திய 2 பாதுகாவலர்கள், ஜெகன்மோகன் ரெட்டியின் வாகனத்தின் கூரை மேல் அமர்ந்தபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மற்றவர்கள் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தி ஜெகன்மோகனின் வாகனம் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தித் தந்தனர்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்தார் என்ற புகாரின் பேரில் 2012 மே 27ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெகன்மோகன் ரெட்டி விடுதலையானது ஆந்திரத்தில் நடைபெற்றுவரும் தெலங்கான எதிர்ப்புப் போராட்டத்து்க்கு வலு சேர்க்கும் என நம்ப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்