இரு நாட்டு எல்லையில் இந்திய பகுதியில் சீனா சாலை அமைத்தால் அதை தகர்த்து எறிவோம் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கன்ஹா சட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
சீனாவுடன் தொடர்ந்து சுமுகமான உறவை பராமரிக்க இந்தியா விரும்புகிறது. இந்த உணர்வுக்கு சீனா மதிப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, இந்திய பகுதிக்குள் ஊடுருவுவதையும் சாலை அமைக்கும் திட்டத்தையும் சீன ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதையும் மீறி இந்திய பகுதிக்குள் சாலை கட்டுமானப் பணியை மேற்கொண்டால் அதை தகர்த்து எறிவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்தார்.
சமீப காலமாக இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் தொடர்ந்து அத்து மீறி நுழைந்து வருவதால் இரு நாட்டு எல்லை யில் பதற்றம் நிலவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிக் கொண் டிருந்தபோதும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. மேலும் இந்திய பகுதியில் சாலை போடும் பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் பலம் அதிகரித்து வருவதை உணர்த்தும் வகையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜவுரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு எதிரே பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்களைக் கையாளும் தொழில்நுட்பம் குறித்து சீன ராணுவம் பயிற்சி அளிப்பதாக பிஎஸ்எப் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள் துறை இணை அமைச்சர் ரிஜிஜு டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவுக்கு எதிரான இந்த செயலை ஆதரிக்கக் கூடாது என சீன அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா-சீனா எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
சீனா மறுப்பு
இதுதொடர்பாக சீன வெளி யுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறும் போது, “இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர் களுக்கு சீன ராணுவம் பயிற்சி அளிப்பதாக வெளியான தகவல் உண்மையானது அல்ல.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. சமீப காலத்தில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சீன ராணுவம் முகாமிட்டிருப்பதாக இந்தியா கூறியிருப்பது இதுவே முதன் முறை” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago