மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகரும் கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சருமான அம்பரீஷுக்கு (62) கடந்த நான்கு நாட்களாக 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டி, அவரது ரசிகர்கள் சிறப்பு யாகம் செய்து வருகின்றனர்.
அம்பரீஷ் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறும் கல்லீரலில் சிறிய அடைப்பும் ஏற்பட்டிருப்பதாகவும் ஓரிரு நாட்களில் குணமடைவார் என்றும் அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அம்பரீஷ் விரைவில் குணமடைய வேண்டி திங்கள் கிழமை மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். பெங்களூரில் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவருடைய ரசிகர்கள் ஹோமம் வளர்த்து வருகின்றனர்.
அம்பரீஷின் உடல்நிலை குறித்து அவரின் மனைவியும் நடிகையுமான சுமலதா கூறுகையில், "என்னுடைய கணவருடைய உடல்நிலை தேறி வருகிறது. அவருடைய உடல்நலம் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago