உருது மொழிக்கு ஆதரவாகப் பேசிய பாஜக உறுப்பினருக்கு பச்சை குல்லா: சிவசேனாவின் கேலிச் செய்கை

By ஐஏஎன்எஸ்

மகாராஷ்டிர சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் எக்நாத் காட்சேவை கேலி செய்யும் விதமாக முஸ்லிம்கள் அணியும் குல்லாவை பரிசாக வழங்க சிவசேனா அமைச்சர் எடுத்து வந்தார்.

மகாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற சட்டப்பேரவையில் 63 பேர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்த வருவாய், சிறுபான்மையின மற்றும் வக்பு விவகாரங்களுக்கான அமைச்சரும் பாஜக-வை சேர்ந்தவருமான எக்நாத் காட்சேக்கு சிவசேனா-வைச் சேர்ந்த திவாக்கர் ராவோத், முஸ்லிம்கள் அணியும் பச்சை நிற குல்லாவை பரிசாக வழங்க அதனை அவைக்கு எடுத்து வந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், "எக்நாத் காட்சே முஸ்லிம்களின் நலன்களின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். உருதுவை மொழிப்பாடமாக்க நினைக்கும் அவருக்கு இந்த குல்லாவை வழங்க போகிறேன்" என்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராட்டியத்தை மொழிப்பாடமாக கொண்ட பள்ளிகளில் மாணவர்கள் உருது மொழியையும் தேர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று எக்நாத் காட்சே வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் காட்சேவின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் விதமாக சிவசேனாவைச் சேர்ந்த திவாக்கர் ராவோத் பச்சை குல்லா பரிசை வழங்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்