தெலங்கானாவின் ஒரே பாஜக எம்.பி.யான பண்டாரு தத்தாத்ரேயா வுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி விரிவு படுத்தவுள்ளார். இதில், தெலங்கா னாவைச் சேர்ந்த தத்தாத்ரேயா அமைச்சராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தத்தாத்ரேயாவை நேரில் அழைத்த பிரதமர் மோடி, அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்போகும் தகவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் அமைச்சராவது உறுதியாகி யுள்ளது. ஆனால், கேபினட் அந்தஸ்து வழங்கப்படுமா அல்லது இணையமைச்சராக நியமிக்கப் படுவாரா என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும்.
தற்போது பாஜக துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் தத்தாத்ரேயா, 1999 2004 கால கட்டத்தில் வாஜ்பாய் தலைமையி லான பாஜக ஆட்சியில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்ச ராக பதவி வகித்தார்.
செகந்திராபாத் தொகுதியிலி ருந்து 1991, 1998, 1999-ம் ஆண்டு களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தத்தாத் ரேயா, 2004, 2009 தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago