தெலங்கானாவில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் 64 நாள் போராட்டம் வாபஸ்: உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்றனர்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 64 நாட்க ளாக பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வந்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று நேற்று தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஓராண்டு கட்டாயமாக கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டுமென தெலங்கானா அரசு, அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த அரசாணையை வாபஸ் பெற வேண்டு மென்றும், தங்களுக்கு வழங்கும் படியை உயர்த்த வேண்டுமெனவும் இவர்கள் கடந்த 64 நாட்களாக கல்லூரி மற்றும் மருத்துவ சேவைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

அரசுடன் இருமுறை நடந்த பேச்சுவார்த் தையும் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு சேவைகளையும் மருத்துவ மாணவர்கள் புறக்கணித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர், 48 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மருத்துவ மாணவர்கள் நேற்று மதியம் தங்களது போராட்டத்தை கைவிட்டு நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்து மருத்துவ சேவை களுக்கு திரும்பி சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்