அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் பலி

By செய்திப்பிரிவு

அஸ்ஸாமில் காரோ தேசிய லிபரேஷன் ஆர்மி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்; 10 பேர் காயமடைந்தனர்.



அஸ்ஸாம் - மேகலாயா எல்லைப் பகுதியில் உள்ள ஜெண்டாபாரி என்ற கிராமத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தீபாவளியையொட்டி கூடியிருந்த மக்கள் மீது ஆயுதங்கள் தாங்கிவந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், 10 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள், கோல்பாரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் படுகாயம் அடைந்தவர்கள், குவாகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும், தீவிராவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் தானியங்கி ஆயுதங்களை வைத்திருந்ததால், இதை மேகாலயாவைச் சேர்ந்த காரோ நேஷனல் லிபரேஷன் ஆர்மி இயக்கத்தினர்தான் செய்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்