பல நாடுகளுடன் ஒப்பந்தம் இல்லை: கருப்புப் பண மீட்பில் சிக்கல்

By பிடிஐ

இந்தியர்கள் பலர் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படும் பல நாடுகளுடன், இந்தியாவுக்கு வரி விதிப்பு தொடர்பாக எந்த ஓர் ஒப்பந்தமும் இல்லை. இதுவே கருப்புப் பணத்தை மீட்பதில் உள்ள சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்சமயம் 37 நாடுகளுடன் இந்தியா வரி விதிப்பு தொடர்பான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால் கேமன் தீவுகள், கர்ன்சே, லீச்சென்ஸ்டீன், மொனாகோ, பெர்முடா, மால்டா உட்பட இன்னும் பல நாடுகளுடன் இந்தியாவுக்கு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. இதனால் கருப்புப் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் சில ஒப்பந்தங்களும் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு மட்டுமே உதவும். ஆனால் இவற்றின் மூலம் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது என்கிறார்கள் கருப்புப் பண விசாரணைக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள்.

இதனால் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று சிலர் அடை யாளம் காணப்பட்டாலும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் போகும் நிலை உருவாகிறது.

ஆனால் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் பின்பற்றப்படும்

`பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்கள்' மூலம் கருப்புப் பணத்தை மீட்பது மட்டுமல்லாமல் தொடர்புடைய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இந்த ஒப்பந்தத்தைப் பல நாடுகளில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்