குஜராத் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபியாக 1982 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கெனவே வகித்து வந்த குஜராத் காவல்துறை வீட்டு வசதி சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலும் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் பகுதியின் முதல் பெண் ஐபிஎஸ் கீதா. தற்போது மாநிலக் காவல் துறையை வழிநடத்தும் முதல் பெண்ணாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் போலி என்கவுன்ட்டர் வழக்கில் டிஜிபி பாண்டே மீது முதன்மைக் குற்றம் சாட்டப்பட்டிருந்ததால் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கீதா டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திறமை வாய்ந்த அதிகாரியாகக் கருதப்படும் கீதா, ராஜ்கோட் காவல் ஆணையர் மற்றும் மாநில சிஐடி துறைத் தலைவர் என முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். ஷோராபுதீன் மற்றும் துள்சிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கீதாவை நியமித்தது.
அதற்குப் பிறகு அவ்வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரிகள், குஜராத் உள்துறை அமைச்சர், அமித்ஷா உள்ளிட்டோருக்கு அதில் சம்பந்தம் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago