மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகால தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்குவித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகனின் நிலை என்னவாகப் போகிறதோ? என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
அமராவதியில் தெலுங்கு தேச கட்சியின் செயற்குழு கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
சட்டம், நீதிக்கு முன் அனை வரும் சமம் என்பதையே இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியலில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான கட்டத்தில் வெளியாகி உள்ளது.
முறைகேடாக ரூ.66 கோடி சொத்து குவித்தவர்களுக்கே 4 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் எனில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்குவித் துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எத்தனை ஆண்டுகாலம் சிறைத் தண்டனை கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago