ஆண்டுக்கு 9% வளர்ச்சி விகிதத்துடன் இந்தியா 2034-ஆம் ஆண்டு 10 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக கட்டமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் தனது ஆய்வுக் கணிப்பில் கூறியுள்ளது.
"இந்தியாவின் எதிர்காலம்: வெற்றித் தாவல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையில் "வர்த்தகத் துறை தலைவர்கள், சமுதாயச் சிந்தனையாளர்கள் ஆகியோரை சந்தித்த பிறகு இந்த விருப்ப இசைவு மாதிரி தயாரிக்கப்பட்டு, இந்த பெருவிருப்ப மாற்றத்தை உருவாக்குவதற்கான மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளது” என்கிறார் பிரைஸ்வாட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் டெனிஸ் நாலி. இவர்தான் புதுடெல்லியில் இந்த அறிக்கையை அறிமுகம் செய்தார்.
இத்தகைய பொருளாதார தாவல் இந்தியாவுக்கு ஏற்பட வேண்டுமெனில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுக்கு 9%-ஆக அதிகரிப்பது அவசியம். இதற்கு கார்ப்பரேட் நிறுவனத் துறைகள், தனி தொழில் முனைவோர் குழுவுடன் இணைந்து தொழில்முனைவோர் சூழல் அமைப்பை, இந்திய அரசுடன் ஆக்கபூர்வமான கூட்டுறவுடன் மேற்கொள்வது அவசியம். என்கிறது இந்த அறிக்கை.
"இந்தியாவின் பொருளாதார வெற்றித் தாவலுக்கு தேவையான உந்து சக்தியை கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் வழங்கினால் போதாது, தங்களது புதிதான தீர்வுகள், இடர்பாடுகள் இருந்தாலும் புதிய முயற்சிகளை எடுத்தல், வேகமாக முடிவுகளை எடுப்பதற்கான திறன், தைரியமான தலைமைப்பண்பு ஆகியவை கொண்ட தனி தொழில் முனைவோர் துறையினரும் இதில் இணைய வேண்டும்” என்கிறார் பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸின் இந்திய தலைவர் தீபக் கபூர்.
இதற்கான தேசிய நடைமேடையை அரசு அமைத்துக் கொடுப்பது முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2034ஆம் ஆண்டு இந்தியா 10 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக உயர்ந்தால் அதில் 40% புதிய தீர்வுகளின் பங்களிப்புகளே இருக்க முடியும் என்றும் அந்த அறிக்கை அறுதியிட்டுள்ளது.
இதற்காக ஒரு 10 தொழிற்துறைகளை இந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சில்லறை விற்பனை துறை, மின்சாரம், உற்பத்தித் துறை, நிதிச்சேவைகள், நகரமயமாக்கம் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட துறைகளில் புதிய தீர்வுகளும், புதிய வர்த்தக மாதிரிகளும் தேவை என்கிறது அந்த அறிக்கை.
ஆதாரத் திறன், சுற்றுச்சூழல் ரீதியாக பாதுகாப்பான புதிய தீர்வுகள் என்ற சவால்களை இந்தத் துறைகள் சந்தித்து வருகின்றன. இந்தத் துறைகல் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. எனவே ஒன்றன் பின்னடைவு அனைத்தின் பின்னடைவாக மாறும் நிலை உள்ளது.
2010ஆம் அண்டு நிலவிய அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில், 2034-ஆம் ஆண்டின் இந்தப் பொருளாதாரத் தாவலை நிறைவேற்ற இந்தியா, தனது ஆண்டுவாரியான முதலீட்டை டாலர் தொகைகளில் 6 மடங்கு அதிகரிப்பது அவசியம். என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago