சம்ஸ்கிருத பாடம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மூன்றாவது பாடமாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளி களில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை, உடனடியாக விசாரிக்க கடந்த 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் கோரியி ருந்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப் பில் ஆஜரான தலைமை வழக்கறி ஞர் முகுல் ரோஹத்கி, 6,7,8-ம் வகுப்புகளில் சம்ஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாகக் கற்பிக் கும் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்த அனுமதி கோரினார். அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், விசா ரணையை 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்