உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் ஆசிட் குடிக்க வைத்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் என்பது அப்பெண் கூறியபோதே போலீஸுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து லக்னோ போலீஸ் அதிகாரி சதீஷ் கணேஷ் கூறும்போது, "பாதிக்கப்பட்ட தலித் பெண் ரே பரேலி பகுதியைச் சேர்ந்தவர். லக்னோவில் ஒரு கடையில் பணி செய்து வந்துள்ளார். கடந்த மார்ச் 10-ம் தேதி தனது மகளின் தேர்வை ஒட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மீண்டும் கடந்த வியாழக்கிழமை அன்று லக்னோவுக்கு கங்கா-கோம்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றிருக்கிறார். அப்போது மோகன்லால் கன்ஜி ரயில் நிலையத்தில் இரு நபர்கள் அவரை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
கைது செய்யப்பட்ட போது சிங், குட்டு இருவரும் 2009 ஆம் ஆண்டு சொத்து தகராறு காரணமாக அப்பெண்ணை பலாத்காரம் செய்து அவரது இல்லத்தில் ஆசிட் வீசியுள்ளனர். மேலும் பல முறை அப்பெண்ணை தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடன் பணிபுரிந்தவர்கள் கூறும்போது, "கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக அப்பெண் குரல் எழுப்பக் கூடாது என்பதற்காக அப்பெண்ணை அவர்கள் ஆசிட் குடிக்க வைத்துள்ளனர்.
மேலும் தனது உயிருக்கு ஆபத்து என்று அப்பெண் போலீஸாரிடம் புகார் அளித்தும் போலீஸார் அதனை கருத்தில் கொள்ளவில்லை" என்றும் அவர்கள் போலீஸார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல்
பாதிக்கப்பட்ட பெண்ணை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
செல்ஃபி எடுத்த போலீஸார் சஸ்பெண்ட்
ஆசிட் குடிக்கவைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணுடன் இரு பெண் போலீஸார் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அந்த இரு பெண் போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago