ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பாக, மாவோயிஸ்டுகள் தொடர் கண்ணிவெடித்தாக்குதல்களை நடத்தினர்.
பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சிறிய துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இது தொடர்பாக லடேகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மைக்கேல் எஸ் ராஜ் கூறியதாவது:
பர்வாடி காவல்நிலையத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அதிகாலை 1.30 மணிக்கு 6 கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். மேலும், பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டனர். இதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தலைப் புறக்கணிக்கும்படி மக்களை மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago