பாலாறு குறுக்கே தடுப்பணை பணி நிறைவு: கண்டன ஆர்ப்பாட்டம் வலுப்பதால் பதற்றம்

By என்.மகேஷ் குமார்

பாலாறு குறுக்கே தடுப்பணை உயர்த்தும் பணியை ஆந்திர அரசு ரூ. 49 லட்சம் செலவிட்டு நிறைவு செய்துள்ளது. இதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று தமிழக-ஆந்திர எல்லை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால் பதற்றம் நிலவியது.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தனது ஆட்சிக் காலத்தில் பாலாற்றின் குறுக்கே 0.6 டிஎம்சி கொள்ளவு கொண்ட சிறிய அணைகட்ட முயற் சித்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு அமைப் புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித் தன. இதையடுத்து அணைகட்டும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில், உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப் பட்டது.

இந்நிலையில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள திம்மம் பேட்டை அருகே உள்ள ஒரு தடுப்பணையின் உயரத்தை 2 அடி வரை உயர்த்த முடிவு எடுத்தார். இதற்காக ரூ.49 லட்சம் ஒதுக்கப் பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தடுப்பணையை உயர்த்தும் பணிகளை மேற்கொள் ளக் கூடாது என கோரி சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதினார். பிற அரசியல் கட்சிகளும் சம்பந் தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தன.

எனினும் எதிர்ப்பை மீறி ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்தும் பணிகளை ரூ. 49 லட்சம் செலவிட்டு நிறைவு செய்துள்ளது. அதிர்ச்சியடைந்த தமிழக வாழ் வுரிமை கட்சியினர், நேற்று ஆந்திர அரசை கண்டித்து திம்மம் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத் தினர். இதனால் இரு மாநில எல்லையிலும் பதற்றம் ஏற்பட்ட தால் தமிழக, ஆந்திர போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்