ஜார்க்கண்ட் தேர்தல் பெண் வேட்பாளர்கள் குறைவு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வேட்பாளர் களுக்கு அதிகமாக வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால், பெண்களின் வாக்கைக் கவரும் வகையில், தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, 72 தொகுதிகளில் களமிறங்கும் பாஜக, ஆறு பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. கூட்டணிகள் ஆதரவுடன் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 69 வேட்பாளர்களில் 10 பேர் பெண்கள்.

காங்கிரஸ் இதுவரை 60 வேட் பாளர்களை அறிவித்துள்ளது. இதில், 10 பேர் பெண்கள். பாஜக வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் ஜார்க்கண்ட் மாண வர்கள் சங்கம் எட்டு தொகுதி களில் போட்டியிடுகிறது. இக்கட்சி, பெண்களுக்கு வாய்ப்பளிக்க வில்லை.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா வின் 32 வேட்பாளர்களில், 3 பேர் மட்டுமே பெண்கள். மேலும் 3 பெண்களுக்கு வாய்ப்பளிக் கப்படும் என அக்கட்சி தெரிவித் துள்ளது. மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 9 வேட்பாளர்களில் மூன்று பேர் பெண்கள்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. வரும் டிசம்பர் 20-ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

25 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்