கட்சிகளின் சித்தாந்த மோதல்: ராகுல் காந்தி கருத்து

By செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தல் கட்சிகளின் சித்தாந்த மோதல் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலம் தண்டாவில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

ஊதிய விகிதத்தில் முரண்பாட்டை களையும் வகையில் ஒரே பதவி, ஒரே ஊதியம் என்ற கொள்கையை ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் நலனில் காங்கிரஸ் கட்சி அதிக அக்கறை கொண்டுள்ளது. இந்த நேரத்தில் நான் வாக்குறுதிகளை அள்ளி வீச விரும்பவில்லை.

எனினும் ராணுவ வீரர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அதை நிறைவேற்ற எனது முழு மனதுடன் முயற்சி மேற்கொள்வேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மத்திய ஊதிய கமிஷனில் ராணுவ வீரர்களின் தரப்பில் பிரதிநிதியை நியமிக்கவும் தொடர்ந்து முயற்சிப்பேன்.

நாடு முழுவதும் 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும், அப்போதுதான் நாடு வல்லரசாகும் என்று கருதுகிறது. எதிர்க்கட்சியின் (பாஜக) சிந்தனை நேர்மாறாக உள்ளது. பணக்காரர்கள்தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகிறது. அந்த கட்சியின் சித்தாந்தத்தில் ஏழைகளுக்கு இடமில்லை என்றார் ராகுல் காந்தி.

இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தி நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்