விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலையில் வைத்து வழிபட ஆந்திராவில் இனிப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 12,500 கிலோ லட்டு பிரசாதத்தை தயாரித்துள்ளது. இந்த லட்டு கின்னஸ் சாதனை படைக்க உள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினத்திலும், தெலங்கானாவில் ஹைதராபாத்திலும் ஆண்டு தோறும் மிக உயரமாக விநாயகர் சிலைகள் தயாரித்து விநாயகர் சதுர்த்திக்கு வைத்து வழிபடுவது வழக்கம்.
இதையொட்டி, ராஜமுந்திரியை சேர்ந்த சுருச்சி ஃபுட்ஸ் எனும் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான லட்டு பிரசாதங்கள் தயாரித்து வழங்கி வருகின்றது.
இந்தாண்டு லட்டு பிரசாதம் குறித்து சுருச்சி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் மல்லிபாபு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டு குஜராத் மாநிலம், அருசூரி பகுதியில் உள்ள அம்பாஜி மாதா கோயிலில் 11,115 கிலோ லட்டு பிரசாதம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இது உலகிலேயே அதிக எடை உள்ள லட்டுவாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதன் காரணமாக தற்போது, வர இருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு விசாகபட்டினம், காஜுவாகா பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைக்கு 12,500 கிலோ எடையில் லட்டு வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதை தயாரிக்க 3,350 கிலோ கடலை மாவு, 4,950 கிலோ சர்க்கரை, 2,400 கிலோ நெய், 400 கிலோ முந்திரி, 200 கிலோ பிஸ்தா உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. விழா நிறைவு நாளன்று இந்த லட்டு பக்தர்களால் ஏலம் எடுக்கப் பட்டு, பின்னர் மீண்டும் பக்தர் களுக்கே விநியோகம் செய்யப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago