கருப்புப் பண விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

By ஆர்.ஷபிமுன்னா

நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று, கருப்புப் பண விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

நேற்று மக்களவை தொடங் கியதும் திரிணமூல் காங்கிரஸ் உறுப் பினர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு சென்று, ‘கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வா!’ என கோஷ மிட்டனர். அவர்கள் கைகளில் ‘கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வா’ என எழுதப்பட்ட குடைகளும் இருந்தன. இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், “அவைக்குள் நடக்கும் போராட்டத்தில் குடைகளை காட்டும் முறை தவறானது” என்று கூறி எச்சரித்தார்.

திரிணமூலுடன் இணைந்த மற்ற கட்சிகள்

இதை அவர்கள் பொருட்படுத் தாத நிலையில், அவர்களுடன், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்பதாக மோடி கூறியதை குறிப் பிட்டு அவர்கள் கோஷமிடத் தொடங்கினர்.

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

முன்னதாக, இந்த விஷயத்தில் பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கருப்புப் பண விவகாரத்தை விவாதிப் பதற்கு கேள்வி நேரத்தை ஒத்திவைக்கும்படி நோட்டீஸ் அளித்துள்ளோம். மக்களவை தேர் தலின்போது இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் அனைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை விமர்சித்தனர். தாங்கள் அதை 100 நாட்களில் மீட்பதாக உறுதி அளித்தனர். அதை செய்யாத வர்கள் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

சபாநாயகர் மறுப்பு

இதே பிரச்சினைக்காக திரிண மூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மறுப்பு தெரிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “இது விதிகளுக்கு முரணானது, அனைத்துக் கட்சிகளுடன் ஆலோ சனை நடத்தி வேறு விதிகளின் கீழ் கண்டிப்பாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

வெங்கய்ய நாயுடு விளக்கம்

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும் போது, “இதில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கருப்புப்பணம் காங்கிரஸ் ஆட்சியில் சென்றதே தவிர, எங்கள் ஆட்சியில் அல்ல. இந்த விஷயத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு பலவற்றை செய்திருக்கிறது” என்றார்.

மக்களவை ஒத்திவைப்பு

இதற்கும் செவிசாய்க்காத உறுப்பினர்கள் கோஷமிட்டபடி அமளி செய்யவே, வேறு வழி யின்றி அவையை சபாநாயகர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

கேள்வி நேரத்தில் எழுந்த இந்த அமளிக்கு இடையே இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதற்கான பதிலை கேட்க முடியாத அளவுக்கு அவையில் கூச்சல் நிலவியது. எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அருகில் அமர்ந்திருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஏதோ சொல்ல எழுந்தார். ஆனால் அமளி காரண மாக அது கேட்கவில்லை.

மாநிலங்களவையிலும் அமளி

கருப்புப் பண விவகாரத்தை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி கள் எழுப்பின. இங்கு அவை கூடியதும் ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிடத் தொடங்கினர்.

திரிணமூல் உறுப்பினரின் பேச்சு

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டேரக் ஓபிரயன் கூறும் போது, “கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவருவதாக அவைக்கு வெளியே மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் அவ்வாறு கொண்டுவரவில்லை. இந்த விஷயத்தில் எதிர்பார்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. அரசு கட்டமைப்புகள் மீது விவாதம் அவசியமாகிறது” என்றார்.

அருண்ஜேட்லி பதில்

இதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளிக்கும்போது, “மத்திய அரசும் இதன் மீது விவாதிக்க விரும்புகிறது. கட்சிகள் எப்போது விரும்பினாலும் கருப்புப் பண மீட்பு குறித்து பேசலாம்” என்றார். தொடர்ந்து நிலவிய அமளியால் மாநிலங்களவையும் ஒரு சிறிய இடைவெளிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நுழைவாயிலில் போராட்டம்

இருஅவைகளும் தொடங்கு வதற்கு முன், நாடாளுமன்ற வளாக நுழைவாயிலிலும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாயிலை மறித்து அமர்ந்தபடி போராட்டம் நடத்தினர். கைகளில் குடைகளுடன், “கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வா, மோடியின் அதிகாரப் போக்கை ஏற்கமாட்டோம்” என கோஷமிட்டனர். இவர்களுடன் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் களும் இணைந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்