தொடர்ந்து நடந்து வரும் பாலியல் பலாத்காரம் மற்றும், கொள்ளைச் சம்பவங்களால் பெங்களூரு நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரில் உள்ள எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில், 25-வயது பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியார் முன்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டை நான்கு பேர் கொண்ட கும்பல் இரவு 11.40 மணிக்கு வந்து தட்டியுள்ளனர்.
மேலும், அவர்கள் போலீஸ் என்றும் அதிகாரமின்றி பீர் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்தது குறித்து விசாரணை செய்யவேண்டும் என்று சத்தம் போட்டனர், அப்போது கணவன், மனைவி, கணவனின் தாயார, 9 மாதக் குழந்தை ஆகியோர் நல்ல தூக்கத்தில் இருந்தனர்,
சத்தம் கேட்ட கணவன் கதவைத் திறந்துள்ளார். அவரைத் தள்ளிக் கொண்டு வீட்டிற்குள் இந்த கொள்ளையர்கள் நுழைந்தனர்.
பதற்றமடைந்த அந்த குடும்பத்தினரை கத்தியால் மிரட்டியும், கட்டிபோட்டும் வீட்டிலிருந்த 30,000ரூபாய் பணம் மற்றும் தங்க ஆபரணங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி வீட்டிலிருந்த 25 வயது தாயை கும்பலில்லிருந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய மற்றொருவர் அதனை வீடியோ வதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிவித்தால் கொன்றுவிடுவோம் என்றும் அவர்களை மிரட்டியுள்ளனர்.
சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் பின்னர், முதலில் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து மட்டும் வழக்கு பதிவு செய்துள்ள பாதிக்கப்பட்டவரின் கணவர், அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மீண்டும் முழு விவரத்தையும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
அதுவரை திருட்டு வழக்காக பார்த்துவந்த போலீசார், விட்டில் பாலியல் பலாத்காரம் நடந்ததை அறிந்தவுடன் திருடர்கள் பரப்பன அக்ரகாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்து நான்கு பேரையும் சிக்பெல்லபூர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேலும், அக்குடும்பத்தினரின் பணமும் நகைகளும் மீட்டு தறப்பட்டது. வழக்கின் விசாரணையில் கும்பலின் நந்தீஷ் மற்றும் அனில் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை சுஜித் குமார் மற்றும் சைமன் வீடியோ பதிவு செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கும்பலிடமிருந்து மேலும் இரண்டு இருசக்கிர வாகனங்களும், 7 செல்போன்களும், சில ஆயுதங்களும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் பல திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago